பெங்களூருக்கு இனி தனி லோகோ...இந்தியாவில் முதல் முறையாக...

பெங்களூருக்கென பிரத்யேக லோகோ வெளியிடப்பட்டு உள்ளது .இதன் மூலம் பெங்களூரு நகரம் தனி கவனம் பெறுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக நகருகென தனி லோகோ வெளியிடப்படுவது முதல் முறையாகும்

கலை,இலக்கியம்,பண்பாட்டை குறிக்கும் வகையில் இந்த லோகோ  வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதே சமயத்தில் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில்,பெங்களூரு  தனி கவனம் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த லோகோ  வடிவமைக்கப்பட்டு உள்ளது

சிறப்பம்சங்கள்

Be  &you  என்ற கான்செப்ட் அடிப்படையாகக் கொண்டு லோகோ உருவாகப் பட்டுஉள்ளது.

ரெட் மற்றும் ஒயிட் கலரில் லோகோ கொடுக்கப்பட்டு உள்ளது

அதேபோன்று, லோகோவில் பாதி ஆங்கிலத்திலும்,பாதி எழுத்துக்கள்  கன்னடத்திலும் வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டு உள்ளது

ஓராண்டு காலமாக லோகோ வடிவமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வந்து தற்போது தான், பைனல் லோகோ வெளியிடப் பட்டு உள்ளது

இந்த புதிய லோகோ மூலம் நியூயார்க் நகரம் போன்று சர்வதேச  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக பார்க்கப்படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது