be alert heavy hot will be in chennai for next 3 three days
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெயில் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன்னியாகுமரி நெல்லை நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதுமே ஆங்காங்கு மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் நிலவி வருவதால், இரவு நேரத்திலும் அதிக வெப்பக்காற்று வீசுகிறது.
இதனை தொடர்ந்து, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருத்தனியில் 103.28 டிகிரி பேரஃனேட் வெப்பம் பதிவாகி உள்ளது

மீனம்பாக்கத்தில் 102.74 டிகிரி பேரஃனேட் வெப்பம் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று மழை அளவை பொறுத்தவரையில், கலவை 2 செமீ, எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலியில் 1 செமீ மழை அளவும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
