பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நேரடியாக நாளை கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் இந்த கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணவர்கள் கூட நேரடியாக கலந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவ்வாறு கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களும் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில், 300 காலி இடங்கள் உள்ளது. அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை முதல் நடைபெற உள்ளது.

இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.