நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஊதிய உயர்வு கோரியும், பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய 3 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். டிசம்பர் 24 திங்கட்கிழமை மட்டும் வங்கிக்கு வேலைநாளாகும். டிசம்பர் 25 செவ்வாயன்று கிறிஸ்துமஸ் என்பதால் அரசு விடுமுறை. டிசம்பர் 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கம் கூட்டமைப்பு விடுத்துள்ளது. 

இதனால் இன்று முதல் புதன்வரை திங்கள் தவிர்த்து 5 நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கிப் பணிகளும் ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தேவையான பணத்தை கையிருப்பில் வைத்திருக்குமாறு வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் தனியார் வங்கிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காததால் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.