Asianet News TamilAsianet News Tamil

Bank Strike : டிச.16, 17 ஆம் தேதிகளில் முடங்கும் வங்கி சேவை… ஸ்டிரைக்கை அறிவித்த வங்கி ஊழியர்கள்!!

2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

bank employees strike on dec 16 and 17
Author
Tamil Nadu, First Published Dec 1, 2021, 2:52 PM IST

2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதோடு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை வெளியீட திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசின் வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள்,  அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  முன்னதாகவே கடந்த மார்ச் மாதம் வங்கி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

bank employees strike on dec 16 and 17

இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஐஓபி மற்றும் சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எழுந்துள்ள நிலையில் இந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டாலும் ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,  வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து வரும் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

bank employees strike on dec 16 and 17

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள  வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்த இருப்பதாகவும்,  ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் இந்த கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுக்குறித்து பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுமட்டும் இன்றி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios