விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். 

காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து எண்ணங்களும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும்.

மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமானோர் இந்த ஆலயத்திற்கு வந்து மலையேறி சென்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில், பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் இன்று தடை விதித்துள்ளனர். மழை நின்று இயல்பு நிலைக்கு வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் மழை காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மக்களே உஷார்..! ஆரஞ்சு அலெர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா ?