மதுரை மாவட்டத்தில் வரும் ஜுலை மாதம் 2 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்களில்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். படிபடிப்படியாக இது அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உதகை, கன்னியாகுமரி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இது படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும்,  ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இது தொடர்பாக  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் வீரராகவ ராவ் கூறினார்..