Asianet News TamilAsianet News Tamil

பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜாமீன் - நிதிமன்றம் அதிரடி உத்தரவு!!

bail for prof jayaraman
bail for prof jayaraman
Author
First Published Jul 31, 2017, 12:24 PM IST


கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரவி வருகிறது. இதையொட்டி மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிரமங்கலத்தில் கடந்த 30ம் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இதனை கண்டித்தும், ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண் சோறு சாப்பிடுவது, ஒப்பாரி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

bail for prof jayaraman

இதற்கிடையில் ஓஎன்ஜிசி  நிறுவனம், கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 9 பேரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios