முதுமலை யானை முகாமில் பாகனை தாக்கிக் கொன்ற யானை..! வெளியான அதிர்ச்சி தகவல்
முதுமலை யானை முகாமில் யானைக்கு உணவு அளித்த பாகனை மசினி யானை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாகன் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுமலை யானைகள் முகாம்
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன.முதுமலை யானைகள் முகாமில் தற்போது 28 யானைகள், 22 பாகன்கள் , 12 உதவியாளர்கள், 21 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். இந்த யானையில் முகாமில் தினந்தோறும் யானைகளுக்கு சத்தான உணவு ஆனது வழங்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு யானைகளுக்கும் தனி பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த முதுமலை யானைகள் முகாமில் தான் ஆஸ்கர் விருது வென்ற ரகு,பொம்மி என்கின்ற இரு யானைகளும் யானைகளும் உள்ளன. இந்த நிலையில் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் உணவு கொடுக்க சென்ற பாகனை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி தடையில்லா மின்சாரம்.! மின்வாரியம் அதிரடி உத்தரவு..!
பாகனை கொன்ற யானை
மசினி என்ற யானைக்கு இன்று காலை வழக்கம் போல் பாகன் சி.எம்.பாலன் உணவு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென பாகனை யானை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பாகனை அருகில் இருந்த மற்ற பாகன்கள் மீட்டு உள்ளனர். இதனையடுத்த பாகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் முதுமலை யானைகள் முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கி பாகன் உயிரிழத்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்