Azhagiri request to karunanidhi
கருணாநிதியின் மகன் மு.க. முத்து - சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவீட்டார் மட்டும் நிச்சயதார்த்த நிகழச்சியில் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வைத்து அக்ஷிதா, ரஞ்சித் திருமணம் இன்று நடைபெற்றது.

இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதி தற்போது தேறி வருகிறார். அதனால் அவரை மண்டபம் வரை அலைய விடாமல் வீட்டிலேயே திருமணமத்தை நடத்தியுள்ளனர்.
புதுமணத் தம்பதி கொள்ளு தாத்தா கருணாநிதியிடம் ஆசி பெற்றனர். அவர்கள் தாத்தாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கருணாநிதியை புதுமணத் தம்பதிகளுடன் பார்த்ததில் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த திருமண விழாவில், கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மு.க.அழகிரியும் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
ஆனால், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை சென்றார். அங்கு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதனால், திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ள முடியாமல் போனது.
தந்தையிடம் உடல் நலம் குறித்து விசாரித்த அழகிரி, கருணாநிதியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தந்தையிடம் பாசமாக பேசிய அவர், மதுரைக்கு வந்து, தன்னுடன் இருக்குமாறும் கூறியுள்ளார்.
