ராம்நாத் கோவிந்த் இன்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதையடுத்து இன்று நடைபெற உள்ள பிழவில் கலந்து கொள் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு சந்தித்திதுப் பேசினார்.

அய்யாகண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள தமிழ்நாடு ஹவுசில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சரை அய்யாகண்ணு தமிழ்நாடு ஹவுசிவ் சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி, தென்னிந்தி நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.