ஜிஎஸ்டி வரி விதிப்பால் 70 சதவீதம்  வருவாய் குறைந்துவிட்டதாகவும், அதனால் தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வாய்ப்பு இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாக அய்யாகண்ணு கூறினார்.

டெல்லி சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பா பழனிசாமியை ஜந்தர் மந்திர் பகுதியில் போராட்டம் நடத்திவரும் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யாகண்ணு வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தில் வருவாய் குறைந்து விட்டதாகவும், 2000 மதுக்கடைகள் அடைக்கப்பட்டதாலும் வருவாய் குறைந்துவிட்டதாகவும், அதனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை என்று தன்னிடம் கூறியதாக அய்யாகண்ணு செய்தியாளர் சற்திப்பின் போது தெரிவித்தார்.

அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோரை நம்பித்தான் விவசாயிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள இப்படி ஏமாற்றவார்கள் என தெரியாது என அய்யாகண்ணு குறிப்பிட்டார்.