ayyakannu meeting with rajini in poes garden
விவசாயிகள் போராட்டத்துக்கு முழு ஆதரவு உண்டு என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இந்திய நதிகளை இணைக்க பிரதமர் மோடியிடம் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்த வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கோரியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்தார்.

அப்போது நடிகர் ரஜினியிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்திய நதிகளை இணைக்க நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாயை பிரதமரிடம் வழங்கக் கூறினோம். தான் அறிவித்தபடியே, ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி கூறியுள்ளார் என்றார்.

அதேபோல், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்றும் ரஜினி கூறியதாக அவர் தெரிவித்தார்.
நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடி பணத்தை எப்போது வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்று நடிகர் ரஜினி உறுதி அளித்துள்ளார். விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் எனவும் நடிகர் ரஜினி காந்த் கேட்டுக் கொண்டதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரவித்தார்.
