வரலாறு தெரியாமல் பேசவில்லை.. திரித்து பேசுகிறார்... ஆளுநர் ரவிக்கு எதிராக சீறிய அய்யா வைகுண்டர் தலைமை பதி

தமிழக வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதன் கவர்னரின் வேலையா ?  என சுவாமி தோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப் பதி குருவான பால பிரஜாபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

ayya vaikundar chief pathi condemned that Governor Ravi is distorting history KAK

அய்யா வைகுண்டர்- ஆளுநர் ரவி பேச்சு

தமிழக ஆளுநர் ஆர் என். ரவி, நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அப்போது அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம், சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என தெரிவித்தார். மேலும் ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில்  இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதி குருவான பால பிரஜாபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் ரவி கருத்து தெரிவித்திருப்பது வருந்ததக்கது என தெரிவித்தார்.

ayya vaikundar chief pathi condemned that Governor Ravi is distorting history KAK

வரலாற்றை திரித்து பேசுகிறார்

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கு மக்களாக அய்யாவழி மக்கள் இருக்கிறார்கள், ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும் ஆன்மிக பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, பூஜை புனஸ்காரங்கள் மொழி பேதம், ஆண் பெண் பேதம், சாதிகள் இல்லை என  பல கோட்படுகளை  கூறியவர்  ஐயா வைகுண்டர். அவர்  நாராயணன் அவதாரம் என்று ஆளுநர் கூறுகிறார்.

ஆளுநர் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உருப்படியான ஆலோசனைகள் கூறுவதை விட்டுட்டு அய்யா வைகுண்டரை பற்றியும் சமாதானத்தை பற்றியும் பேசுவது அவரது வேலை அல்ல என்று அய்யா வைகுண்டரின் தலைமைப் பதி குருவான பால பிரஜாபதி கூறினார் 

இதையும் படியுங்கள்

முதல்வர் குறித்து அவதூறு.. வசமாக சிக்கிய சி.வி. சண்முகம்.! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios