ஆத்தூர் நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? தற்போதைய நிலவரப்படி ஆத்தூர் நகராட்சியில் 12 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக...
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஆத்தூர் நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சிகளில் ஒன்று ஆத்தூர் நகராட்சி ஆகும். நகராட்சி தொடக்கத்தில் 10 வார்டுகளாக இருந்து வந்தநிலையில் 1969-ல் 18 வார்டுகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு 1986-ம் ஆண்டு முதல் 28 வார்டுகளானது. தற்போது 33 வார்டுகளாக ஆத்தூர் நகராட்சி உள்ளது. தி.மு.க. 31 வார்டுகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் 2 வார்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், எதிர் அணியாக விளங்கும் அ.தி.மு.க. 33 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக அ.ம.மு.க. 24 வார்டுகளிலும், பா.ம.க. 9 வார்டுகளிலும், தே.மு.தி.க. மற்றும் பா.ஜ.க. தலா 6 வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார்கள். ஆத்தூர் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க.வே அதிக முறை கைப்பற்றியுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.வே வெற்றி வாகை சூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆத்தூர் நகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற தி.மு.க.வினர் பல்வேறு வியூகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு போட்டியாக அ.தி.மு.க.வினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சி தேர்தல் நடைபெறுவதால் அடுத்த நகராட்சி தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஆத்தூர் நகர மக்களிடம் எழுந்துள்ளது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆத்தூர் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆத்தூர் நகராட்சியில் 12 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.
