நீலாங்கரை அருகே அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில், மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரை அருகே உள்ள பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் வசிப்பவர் தனபால். முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
நேற்று தனபால், தனது குடும்பத்தினருடன் கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி சென்றார். இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள 4 பீரோக்களை, நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். உடைக்க முடியாததால், அவர்கள் திரும்பி சென்றது தெரிந்தது.
இதுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தனபால் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், தனபால் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவரது வீட்டின் வெளியே ஒரு வாலிபர், நீண்ட நேரமாக சுற்றி வந்தது பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேமராவில் பதிவான உருவத்தை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
