Asianet News TamilAsianet News Tamil

இனிமேல் போலீஸை அடிச்சு பாருங்க! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை...

attacking police get Strong action will be taken - Minister warns ...
attacking police get Strong action will be taken - Minister warns ...
Author
First Published Apr 23, 2018, 7:15 AM IST


திருப்பூர் 

தமிழகத்தில் காவலாளர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.

திருப்பூர் மாவட்ட, வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சமூக நலத்துறை மற்றும் வருவாய்துறையின் சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குதல், 

மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் பட்டா மாறுதல் வழங்குதல் என்று 385 பயனாளிகளுக்கு ரூ.73 இலட்சத்து 74 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர், "சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை வயது முதிர்வு காரணமாக இறந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் அனைத்து கால்நடைகள் பயன்பெறும் வகையில், லிஃப்ட் வசதியுடன் புதிதாக இலவச அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் வசதியை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைப்பார். மருத்துவ குழுவுடன் கால்நடைகள் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இரும்பு கரம் மூலம் ஆட்சியை எப்படி நிலை நாட்டினாரோ, அந்த வழியில் இந்த ஆட்சியும் செயல்படும். 

தமிழகத்தில் காவலாளர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios