Attack on the pregnant woman who did not repay the loan
கடனை திருப்பி செலுத்தாததால் பாலசமுத்திரம் பகுதியில் ஈஸ்வரி என்ற கர்ப்பிணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், கருவில் இருந்த 9 மாத சிசு உயிரிழந்து.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்ததிரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் 9 மாதம் கர்மாக இருந்தார்.
இதனிடையே ஈஸ்வரி அப்பகுதியில் உள்ள சிலரிடம் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆகியும் பணம் திருப்பி கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதைதொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டபோது அவர்களுக்கும் ஈஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியுள்ளது.
இதில், சிலர் ஈஸ்வரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, படுகாயம் அடைந்த ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஈஸ்வரியின் வயிற்றில் இருந்த 9 மாத சிசு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
கடன் திருப்பி தராதனாலேயே தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் அவர்களின் தாக்குதலாலேயே சிசு உயிரிழந்ததாகவும் ஈஸ்வரியின் கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
