attack on gowthaman in puzhal prison

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் கிண்டியில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.

ஜல்லிகட்டு போராட்டத்தின் போது இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய போது இவரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் திடீரென கிண்டி மேம்பாலம் அருகே சங்கிலியை கொண்டு சாலையின் குறுக்கே கட்டி பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்.

இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் 6ம் நம்பரில் உள்ள அறையில் கெளாதமன் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 2பேர் அறையில் உள்ளனர்.

காலை மாலை நேரத்தில் சிறை வளாகத்திற்குள் சிறிது நேரம் வலம் வரும் கௌதமனை இரண்டு பேர் தொடர்ந்து நோட்டம் விட்டு அறையில் அவர் தனியாக இருக்கும் போது கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளனர்.

இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே கொலையாளிகளை பிடித்து தனி அறைக்கு அழைத்து சென்றுகௌதமனை அவர்கள் கொலை செய்ய வேண்டிய காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டதால் தற்போது இருந்த அறையை விட்டு மாற்றியும் உள்ளனர் போலீசார். மேலும் உணவும் அவருக்கு தேவையான அனைத்தும் அவரது அறைக்கே வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவும் இட்டுள்ளனராம்.