பேராசிரியை பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், மாணவிகளிடம் பேசிய பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவர்களின் விருப்பத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தால் உங்களை அவா்கள் அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் மாதா மாதம் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும் என்று பேசி மாணவிகளை பெரிமநிதர்களின் படுக்கைக்கு அனுப்ப புரோக்கராக மாறியிருந்த விஷயம் கேட்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை அதிரடியாக இடைநீக்கம் செய்தது. இதையடுத்து மாணவிகளுக்கு தவறான பாதையை போதித்த நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று முன்பு கல்லூரி முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும். பின்னர் கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்து திரும்பி விட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியதில் நிர்மலா தேவி வீட்டுக்குள் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்தவுடன் கதவை உடைத்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டனர். 7 மணி நேரங்களுக்கு பிறகு கணவர் சரவண பாண்டி, சகோதரர் மாரியப்பன் உள்ளிட்டோர் கதவை திறந்து சரணடைந்து விடுமாறு செல்போன் மூலம் நிர்மலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் அதை கேட்கவில்லை. இதையடுத்து இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நிர்மலா தேவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, உள்ளேயே இருந்து கொண்டார்.  பல மணி நேரத்திற்குப் பிறகு நிர்மலா தேவியின் கணவர் மற்றும் சகோதரர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருச்சுழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று பேராசிரியை விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.  இந்த விவகாரத்தில் உயர் மட்டக்குழு விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தவிட்டுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் விசாரணை மேற்கொள்வார் என்ற உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியது குறித்து விசாரிக்க மதுரைப் பல்கலைக் கழகம் நியமித்துள்ள 5 பேர் கொண்ட குழு இன்று விசாரணையைத் தொடங்க உள்ளது. பேராசிரியை மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை செய்து 15 நாட்களுக்குள் துணைவேந்தரிடம் இந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.