arun jetley said about salary hike

இன்ப அதிர்ச்சி கொடுத்த அருண்ஜெட்லி..! கடைசி உரையில் ஊதிய உயர்வு..!

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட் தாக்கலின் போது அருண் ஜெட்லி,ஊதிய உயர்வை பற்றி வாசித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

யாருக்கு தெரியுமா ஊதிய உயர்வு..?

எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்வு

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்வு

அதாவது, ஜனாதிபதியின் ஊதியம் ரூ5 லட்சம்மாகவும், துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சம் ஊதிய உயர்வும் உயர்த்தப்பட்டு உள்ளது

தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை

தனிநபர் வருமான வரி 12.6% அதிகரிப்பு

நிதிப்பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும்

41% கூடுதலாக வருமான வரி கணக்குகள் தாக்கல்

அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதாரைப் போல தனி அடையாள அட்டை

ஒரு மணிநேரம் 51 நிமிடம்

ஒரு மணிநேரம் 51 நிமிடம் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண்ஜெட்லி, பட்ஜெட் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாபெரும் திட்டங்கள் இல்லை என மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.