Arrested the son who cut father with family members by drunk
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டையில் குடிபோதையில் தந்தை, அக்கா, மாமாவை அரிவாளால் வெட்டியவரை காவலாளர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சாப்ராங்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா (60). இவரது மகன் வெங்கடேசன் (20), மகள் முருகம்மாள் (24).
முருகம்மாளுக்கு திருமணம் முடிந்து கணவர் மஞ்சுநாத் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில், வெங்கடேசன் நேற்று சாராயம் குடித்துவிட்டு போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை திம்மப்பா, அக்கா மற்றும் மாமா ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை காவலாளர்கள் வழக்குப் பதிந்த வெங்கடேசனை கைது செய்தனர். தற்போது வெங்கடேசனிடம் விசாரணை நடந்து வருகின்றது.
