கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே அரிசி ராஜா என்ற யானை தாக்கியதில் நவமலை, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நள்ளிரவில் ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசியை இந்த யானை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அந்தி யானைக்கு அரிச ராஜா என அப்பகுதி மக்கள் பெயர் வைத்தள்ளனர்.

இந்த யானை தொடர்ந்து பொது மக்களை அச்சறுத்தி வந்ததால்   அரிசிராஜாவை பிடிக்க வேண்டும் என பொது மக்கள்  போராட்டம் நடத்திய நிலையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானையை பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டது. இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரி பாளையத்தில் அரிசி ராஜா என்னும் யானை மக்களை அச்சுறுத்தி வந்தது. அதனை பிடிக்க முயன்ற போது பிடிபடாமல் மூன்றுநாட்களாக போக்கு காட்டி வந்தது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாறை ஒன்றின் மறைவில் இருந்த அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானை வரகழியாறு வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.அரிசிராஜா மயக்கமடைந்த நிலையில் மற்ற பகுதிகளில் நின்று கொண்டு இருந்த வனக்குழுவினரை உடனடியாக ஒரே இடத்திற்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

காட்டு யானை அரிசிராஜாவை சமதள பரப்பிற்கு கும்கி யானை கலீம் மூலம் இழுத்து வரப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த காட்டு யானை அரிசி ராஜா கும்கி யானை கலீமுடன் ஒத்துழைக்க மறுத்து ஆவேசமாக மோதியது.

கும்கி யானை கலீம் , காட்டு யானை அரிசிராஜாவை முட்டியதுடன் சமதள பரப்பிற்கு இழுத்து வந்தது. இதையடுத்து  அரிசி ராஜா யானை தற்போது லாரியில் ஏற்றப்பட்டு வனத்துறையினரால் வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது.