Asianet News TamilAsianet News Tamil

பண்பாட்டை வெளிக்கொணருவதில் தொல்லியலும் முக்கியம்! மாஃபா. பாண்டியராஜன் 

Archeology is also important to uncover culture!
Archeology is also important to uncover culture!
Author
First Published Oct 9, 2017, 6:15 PM IST


சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை 4 ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதாகவும், விரைவில் அகழாய்வு பணிகள் தொடரும் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், சென்னை, எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கீழடியில் அகழாய்வு 4-வது கட்டமாக தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். இது சோதனை அடிப்படையிலான ஆய்வாக
இருக்காது என்றும் முழுமையான அகழாய்வாக இருக்கும் என்றும் கூறினார்.

கீழடி அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆவணப்படுத்தி, மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கீழடியில் 4-வது அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது என்று கூறினார். கலைப் பொக்கிஷங்களை காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்தக் கூடியது
ஜெயலலிதாவின் அரசு என்றார்.

ஜெயலலிதா இந்த துறையை நேசிப்பவர் என்றும், பண்பாட்டை வெளிக்கொணருவதில் இலக்கிய சான்றுகள் மட்டும் போதாது என்றும் தொல்லியல் சான்றுகளும் தேவை என்று கூறினார். இந்த பொக்கிஷங்களை தேடி எடுப்போம்; பாதுகாப்போம்; வெளிச்சம்போட்டு எடுத்து சொல்வோம். இதனால
தமிழகத்தின் கலாச்சாரத்தை வெளிக்காட்ட முடியும் என்றும் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios