apollo doctor said about jayalalitha finger print

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரின் உடல்நிலை பற்றி,அப்பலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி,தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இது குறித்து அப்போலோ குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரித்தா ரெட்டி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்...

"ஜெயலலிதா படுத்த நிலையிலேயே அதாவது,மயக்க நிலையிலேயே தான்
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும்,பின்னர் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிவந்த ஜெயலலிதாவுடன் ஒரு சிலர் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மற்றபடி, அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்தார்களா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும்,ஜெயலலிதாவின் கை ரேகை பெறப்பட்ட நேரத்தில் தான் மருத்துவமனையில் இல்லை என்றும் அப்போலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி தெரிவித்து உள்ளார்

அதாவது எந்த கேள்விக்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதனை தவிர்த்து மற்ற கேள்விகளுக்கு மட்டும் சாதாரண விளக்கமே கிடைத்துள்ளது.

ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான்,ஜெயலலிதா மரணம் தொடர்பான அனைத்து சந்தேகத்திற்கும் விளக்கம் கிடைக்கும்.