கிருஷ்ணகிரியில் போலி மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவு போலி மருத்துவர்கள் உள்ளதாக மாவட்ட சுகாதார துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இந்த தகவலை அடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்களை கைது செய்யும்படி காவல் துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 5 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்தி வரும் இந்த சோதைனையில் மேலும் ஒரு போலி மருத்துவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 6 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.