Another case on Vedanta Company on Madurai High Court
மதுரை
மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வம், தாரணி ஆகியோர் இந்த வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர், மத்திய சுங்கத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
