6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு அட்டவணை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏப்.1 முதல் அமலுக்கு வந்தது மின்கட்டண உயர்வு... அறிவிப்பை வெளியிட்டது புதுவை மின்துறை!!

இதேபோல் மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆண்டு தேர்வு நடைபெறும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருக்கிறார். சென்னையில் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அந்தந்த மாவட்டங்களுக்கும் தனித்தனியே ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பேருந்து ஓட்டத் தெரியாமல் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எம்எல்ஏ! அலரியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!

இதனிடையே நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு தேர்வுக்கான முழு கால அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.