சென்னை வெள்ள பாதிப்பு... கடுமையாக உழைக்கும் மாநகராட்சி அதிகாரிகள்.! பாராட்டு தெரிவித்த அண்ணாமலை

15 ஆண்டுகளாக சென்னையில் மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Annamalai said that the Chennai Corporation officials are working well in the flood-affected work KAK

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் பல்வேறு பகுதியில் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை மற்றும் வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர், பால் போன்றவை கிடைக்காமல் அவதி அடையும் நிலையும் உள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற போர்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் தண்ணீர் முழுவதுமாக நீங்கியுள்ளது. இருந்த போதும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Annamalai said that the Chennai Corporation officials are working well in the flood-affected work KAK

களத்தில் அண்ணாமலை

இந்தநிலையில் வேளச்சேரி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.தொடர்ந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கான அடிப்படை தேவையாக தண்ணீர் தான் உள்ளது.  சென்னையில் தேங்கிய மழை நீரில் கிட்டத்தட்ட 70% வடிந்துவிட்டது.  இன்னும் 30% தான் மழை நீர் தேங்கியுள்ளது. நாளைக்குள் அதுவும் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும்  தண்ணீர் தேங்கியுள்ள பகுதிக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டித்து வைத்துள்ளனர். எனவே இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இந்த நேரத்தில் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

Annamalai said that the Chennai Corporation officials are working well in the flood-affected work KAK 

பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தீர்வு

கடந்த 4 நாட்களாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், முன் களப்பணியாளர்களும் தொடர்ந்து களத்தில் இருக்கிறார்கள். சென்னை மக்கள் அதிகாரிகளை நம்புகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகளை நம்ப தயாராக இல்லை. எனவே அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். திட்டங்களை சரியான முறையில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். 15 ஆண்டுகளாக சென்னையில் மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. மாற்றுக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியும் சென்னை வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அமைச்சருடன் ஆய்வுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த திமுக எம்எல்ஏவின் கால் முறிவு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios