Asianet News TamilAsianet News Tamil

Annamalai: காங்கிரஸ் பட்ஜெட்டில் 6ஆண்டுகள் தமிழ்நாடு பெயர் இடம்பெறவில்லையே.!ஸ்டாலினுக்கு எதிராக சீறிய அண்ணாமலை

கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

Annamalai said that Tamil Nadu name did not appear in the central budget for 6 years during the Congress rule KAK
Author
First Published Jul 24, 2024, 10:19 AM IST | Last Updated Jul 24, 2024, 10:23 AM IST

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள்

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் என எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை, இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை, எப்போதும் கூறும் திருக்குறளும் இல்லையென தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது. 

 

6ஆண்டுகள் தமிழ்நாடு பெயர் இல்லையே

நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.  திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

டெல்லியில் MPகள் போராட்டம்.. நிதி ஆயோக்கை புறக்கணிக்கும் தமிழகம் - ஸ்டாலின் அதிரடி!

Annamalai said that Tamil Nadu name did not appear in the central budget for 6 years during the Congress rule KAK

கூட்டத்தை புறக்கணிக்க நாடகமாடும் ஸ்டாலின்

பிரதமர் மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?
மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்? 

ஒரு நாள் விளம்பரத்திற்காக வீண் நாடகம்

தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.  முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார். 

DMK : கோவை டூ சென்னை.! திமுக எம்பி மீது திடீர் வழக்குப்பதிவு -அதிர்ச்சியில் அறிவாலயம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios