கோவையில் அண்ணாமலை கைது! திமுக அரசின் ஜனநாயக படுகொலை! கொதிக்கும் பாஜக!

BJP condemns DMK Government: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. 

Annamalai arrested in Coimbatore! BJP condemns DMK government tvk

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மதவாத பிரிவினைவாத மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து, அமைதியான முறையில் கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலையையும், பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது செய்ததன் மூலம் பயங்கரவாதிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் ரவுடிகளுக்கும் புகலிடம் கொடுக்கும் ஆட்சி, திமுக ஆட்சி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து இந்த கருப்பு தின பேரணி நடைபெற்றது.  ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த கருப்பு தின பேரணிக்கு காவல்துறை வேண்டுமென்று அனுமதி மறுத்து, அராஜகத்துடன் பேரணியில் கலந்து கொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்து ஒரு ஜனநாயக படுகொலையை இன்று நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது! பதற்றம்! போலீஸ் குவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான அல்-உம்மா இயக்க நிறுவனரும், 60 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிற 'பாஷா' உயிரிழந்த நிலையில், மக்கள் விரோத திமுக அரசின் காவல்துறை, பாஷாவை கதாநாயகன் போல், போராளி போலவும் தியாகியாகவும் பெருமைப்படுத்தும் வகையில், ஜனநாயகத்தை மதிக்காமல், சட்டம் ஒழுங்கை  சீர்குலைக்கும் வகையில், தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி பெரும் ஊர்வலம் போல பேரணியாக இறுதி ஊர்வலம் செல்ல அனுமதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல் தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும். தமிழக அரசு செய்ததை தவறு என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்தும் வகையில் நல்லெண்ணத்தோடு தமிழக பாஜக தலைவர் தேசிய உணர்வுடன் நாட்டுப்பற்றுடன் தேசபக்தியை வளர்க்கும் வகையில் அமைதியான முறையில் கருப்பு தின பேரணி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

பயங்கரவாதத்தை உற்சாகப்படுத்தும் வகையில் படுபாதக செயலை செய்தவருக்கு பேரணியையாக இறுதி ஊர்வலம் அனுமதித்த தமிழக அரசின் தவறான அணுகுமுறையை, அடையாளப்படுத்தும் விதத்தில் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக நடைபெற்ற இந்த ஊர்வலத்தை காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக தடுத்து அவர்களை கைது செய்தது அராஜகம்.

இதையும் படிங்க:  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.2 லட்சம் பரிசு கொடுக்கும் தமிழக அரசு!

தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நடைபெற்று வரும் இது போன்ற அவலங்களை படுபாதக செயல்களை பாஜக மக்கள் துணையுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தும். நல்லெண்ணத்திற்காக பேரணி நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும் பாஜக தொண்டர்களையும் கைது செய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios