Asianet News TamilAsianet News Tamil

ஒரு அண்ணாத்த டிக்கெட் விலை ரூ.2925யா..? தமிழ்ப்பட இயக்குநரை நொங்கெடுத்த ரசிகர்கள்...

ஒரு அண்ணாத்த டிக்கெட் விலை ரூ,2925 என டுவிட்டரில் தவறான பதிவை வெளியிட்ட இயக்குநரை ரசிகர்கள் நொங்கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Annaatthe ticket rs 2925
Author
Chennai, First Published Oct 30, 2021, 10:52 PM IST

சென்னை: ஒரு அண்ணாத்த டிக்கெட் விலை ரூ,2925 என டுவிட்டரில் தவறான பதிவை வெளியிட்ட இயக்குநரை ரசிகர்கள் நொங்கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Annaatthe ticket rs 2925

கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த தலைமுறை ரசிகர்கள் இப்போது தான் தீபாவளி நாளில் ரஜினிகாந்தின் படத்தை பார்க்கும் அனுபவத்தை பெற உள்ளனர்.

படத்தின் பாடல்கள், டிரெய்லர் என ஒவ்வொன்றும் பக்காவாக இருப்பதால் படம் சூப்பர் ஹிட் என்று இப்போதே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் தங்கள் தலைவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கண்டு கடும் வருத்ததிலும் சோகத்திலும் உள்ளனர்.

Annaatthe ticket rs 2925

அண்ணாத்த ரிலீசுக்கு முந்தின நாள் ரஜினிகாந்த் வீடு திரும்பி விடுவார் என்று ஒய் ஜி மகேந்திரன் கூறி இருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் அவர் திரும்பிவிட்டார் என்ற அறிவிப்புக்கான காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் படம் முன் பதிவை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இப்போதே புக் செய்து வருகின்றனர். படு விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இப்படிப்பட்ட தருணத்தில் பிரபல இயக்குநர் ஒரு அண்ணாத்த படம் பற்றிய டுவிட்டர் ஒன்றை போட்டு ரசிகர்களிடம் இருந்து வசவு வார்த்தைகளை வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்.

Annaatthe ticket rs 2925

அந்த இயக்குநர் பெயர் மு. களஞ்சியம். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் அண்ணாத்த படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது தெரிகிறது. அண்ணாத்த படம், எப்போது டிக்கெட் புக் செய்யப்பட்டது, எத்தனை மணிக்கு ஷோ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த டிக்கெட்டில் 2925 ரூபாய் என்று பதிவாகி உள்ளது. இதைத்தான் இயக்குநர் பதிவாக வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

ஒரு அண்ணாத்த டிக்கெட் விலை ரூ.2925. இது பகற்கொள்ளை இல்லையா ? முதல்வரின் மகன் இப்படி செய்யலாமா? அரசு அனுமதிக்கலாமா? தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்காதா ?

இந்த கொரோனோ காலத்தில் இதுபோன்று கொள்ளையடித்தால் எப்படி மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் ? சிஸ்டம் கெட்டுப்போச்சுன்னவர் இதை கேட்க மாட்டாறா என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கி உள்ளார்.

இந்த பதிவை சட்டென்று பார்ப்பவர்களுக்கு மனதில் தோன்றுவது இதுதான். என்னது… அண்ணாத்த படத்தின் ஒரு டிக்கெட் விலை 2925 ரூபாயா என்பது தான். ஆனால் அதில் இருப்பது 15 டிக்கெட்டுக்களுக்கான ஒட்டு மொத்த விலை தான் 2925 ரூபாய்.

Annaatthe ticket rs 2925

அதை சரியாக கணக்கிடாமல் அல்லது குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக ஒரு டிக்கெட் 2925 ரூபாய் என்று குறிப்பிட்டதை கண்டு ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். கணக்கு தெரியாமல் கருத்து சொல்ல வேண்டாம்..? எதற்கான இப்படி உள்நோக்கத்துடன் பதிவிடுகிறீர்கள்? முதலில் அந்த தவறான பதிவை நீக்குங்கள் என்று நொங்கெடுத்துவிட்டனர்.

ஒரு கட்டத்தில் தமது தவறை உணர்ந்ததாலோ அல்லது ரசிகர்களின் அர்ச்சனைகளை தாங்கமாட்டாது என்னவோ அந்த தவறான டுவிட்டர் பதிவை மு. களஞ்சியம் நீக்கிவிட்டார். ஆனாலும் எங்கிருந்தோ அந்த டுவிட்டர் பதிவை பிடித்துக் கொண்டு இயக்குநரை இன்னமும் போட்டு தாளித்து எடுத்துக் கொண்டு வருகின்றனர் அண்ணாத்த ரசிகர்கள்…!

Follow Us:
Download App:
  • android
  • ios