Anna University examinations will be held tomorrow

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் எனவும் கனமழையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் எனவும் கனமழையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.