மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவக்கனவு பாதியில் கருகியதை தாங்க முடியாமல் மாணவி அனிதா தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவரின் இறப்புக்கு நியாயம் கேட்டு, மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்களும், மாணவியின் இறப்புக்கு மத்திய - மாநில அரசுகளே என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் பக்ரீத் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்று விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.