மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு, டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

டிடிவி தினகரன் முன்னதாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கே தேவையில்லாத ஒன்று என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை, அரியலூர் மாவட்டம் குழுமூர் சென்ற டிடிவி தினகரன், அனிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்

முன்னதாக, அரியலூர் வந்த டிடிவி தினகரனுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொல். திருமாவளவன் தலையீட்டுக்குப் பிறகு, பொதுமக்கள் அமைதியாகினர். இதன் பின்னர், மாணவி அனிதாவின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.