Asianet News TamilAsianet News Tamil

விவசாயிக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி மையக் கட்டிடம்; கேள்விக் கேட்டவர் கைது…

anganwadi center-in-place-of-the-building-belongs-to-th
Author
First Published Dec 2, 2016, 11:20 AM IST


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, விவசாயிக்கு சொந்தாமான இடத்தில் அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, கேள்விக் கேட்ட அந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.

குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் அண்மையில் கட்டப்பட்டது.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரபிரகாசம் (60), அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி, கடந்த செவ்வாய்க்கிழமை அந்தக் கட்டடத்தை பூட்டினார்.

இதையறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் தலைமையிலான காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், அங்கன்வாடி மையக் கட்டடம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை அங்கன்வாடி மையக் கட்டடத்தை சந்திரபிரகாஷம் மீண்டும் பூட்டியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன், கிராம நிர்வாக அலுவலர் சிவசாமி, ஊராட்சி எழுத்தர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்படாத சந்திரபிகாஷம், தனக்குச் சொந்தமான இடத்தில் இந்த கட்டிடத்தை கட்டி தன்னை ஏமாற்றுகின்றனர் என்று சத்தமிட்டார்.

உடனே, அங்கு வந்த காவலாளர்கள், அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அரசு அலுவலர்களுக்கு சந்திரபிரகாஷம் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அலுவலர்கள் கூறியதைக் வைத்து சந்திரபிகாஷத்தை கைது செய்தனர்.

அங்கன்வாடி கட்டிடம் தனக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று விவசாயி கூறும்போது அவர் தரப்பையும் விசாரனைக்கு எடுத்துக் கொள்வது தானே அறம் என்று அங்கிருந்த மக்கள் பேசிக் கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios