ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் வீட்டின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்கு மர்ம நபர் தீ வைத்ததில், எரிந்து கருகி நாசமானது.

ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலைமணி (49). இவருக்குச் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆட்டோவை வீட்டு வளாகத்திற்குள் நிறுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணிக்கு வீடு திரும்பினார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இரவு 11.30 மணியளவில், பக்கத்து வீட்டுக்காரர், ஆட்டோ தீ பிடித்து எரிவதாக கலைமணியை எழுப்பியுள்ளார். அவர் வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

அவரும், அருகில் இருந்தவர்களும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீயை அணைப்பதற்குள் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.

இதுகுறித்து கலைமணி, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “ஆட்டோவுக்கு யாரோ மர்ம நபர் தீ வைத்துள்ளதாக” கூறியுள்ளார்.

இதற்கு மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆரல்வாய்மொழி (பொறுப்பு) ஆய்வாளர் பென்சாம், உதவி ஆய்வாளர் தங்கராஜா மற்றும் காவலாலர்கள் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவிலில் இருந்து தடயவியல் நிபுணர்களும் சென்று விசாரணை நடத்தி அங்கு பதிந்து இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவலாலர்கள் வழக்கு பதிவு செய்து ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.