An unidentified person killing spree the couple cut kankayam police investigation at the garden
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மிதிப்பாறை என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன், மனைவி இருவரையும் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர் .
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோடு மிதிபாறை என்ற கிராமத்தில் உள்ள காரக்காட்டு தேட்டத்தில் அரிசி அப்புக்குட்டி(எ) பழனிசாமி(65), இவர் மனைவி கண்ணம்மாள்(55) இருவரும் வசித்து வந்தனர் .இருவரும் விவசாயம் செய்துவந்தனர் .

இந்நிலையில் நேற்று இரவு கண்ணம்மாள் வீட்டிகுள் உறங்கி கொண்டிருந்தார். வீட்டின் வெளியில் பழனிசாமி துங்கிங்கொண்டிருந்தார். இரவு மர்ம நபர்கள் முதலில் பழனிசாமியை வெட்டியுள்ளனர். சத்தம் கேட்கவே கண்ணாமாள் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார் அவரையும் கழுத்தை அருத்து கொலை செய்துள்ளனர். காலை 6 மணிக்கு பால் வாங்க சென்ற பால்காரர் கொலை நடத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இவர் மகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின் காங்கயம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கொள்ளை அடிக்க வந்தவர்கள் செய்ததா அல்லது முன்விரோதம் காரணமாக செய்யப்பட்டது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்குப்பட்டு இது குறித்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பழனிசாமிக்கு பெரியசாமி என்ற மகனும், ஜோதிமணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்யது காங்கயம் நகரப்பகுதியில் வசித்து வருகின்றனர். தனியாக இருக்கும் வீட்டில் இரட்டை கொலைகள் நடந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
