amman chudithar issue and photo viral in social medias

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயுரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அணிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கோவில்களில் பொதுவாக அம்மனுக்கு பட்டு அணிவித்து பூஜை செய்வதுதான் வழக்கம். ஆனால் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு அர்ச்சகர்கள் ராஜ் மற்றும் கல்யாணம் ஆகியோர் சுடிதார் அணிவித்து அலங்காரம் செய்துள்ளனர்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வைரலானதை அடுத்து கோவிலை நிர்வகித்துவரும் திருவாவடுதுறை ஆதீனம், இரு அர்ச்சகர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

ஆகம விதிகளை மீறி ராஜ் மற்றும் கல்யாணம் ஆகிய இரு அர்ச்சகர்களும் செயல்பட்டதாக கூறி அவர்களை ஆதீனம் நீக்கியுள்ளார்.