அரசியலமைப்பு வரைவுச் சட்டம் உருவாக்கிய தினத்தை அம்பேத்கர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலர் மா.செ. சிந்தனைச்செல்வன் தெரிவித்தார்.

போடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டப் பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், போடி திருவள்ளுவர் சிலை திடலில் சட்டப் பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, இளஞ்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். தேனி மேற்கு மாவட்டச் செயலர் ரவி முன்னிலை வகித்தார்.
மாநில துணைப் பொதுச் செயலர் ஆற்றலரசு, மாநில துணை அமைப்பாளர் செல்லப்பாண்டி, போடி ஒன்றியச் செயலர் நிவாஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், கட்சியின் மாநிலச் செயலர் மா.செ. சிந்தனைச்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.

அதில், “சல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமாயிருந்த பீட்டா அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தார். அரசியலமைப்பு வரைவுச் சட்டம் உருவாக்கிய தினத்தை அம்பேத்கர் தினமாக அனுசரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.