திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமரி தற்கொலை செய்துக்கொண்டதோடு, அவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமரி தற்கொலை செய்துக்கொண்டதோடு, அவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் ஒரகடம் ஆயிரத்தம்மன் நகர் பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். 41 வயதான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கிருஷ்ணகுமாருக்கும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.க்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார், முகப்பேரில் வசிக்கும் பெண் எஸ்.ஐ வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்.

அங்கு பெண் எஸ்.ஐயோடு கிருஷ்ணகுமார் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற நொளம்பூர் போலீசார், கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த கிருஷ்ணகுமார் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில், எனது சாவுக்கு பெண் எஸ்.ஐ தான் காரணம், என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் தற்போது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிருஷ்ணாகுமார், கடந்த செப்டம்பர் மாதம் எனது பக்கத்து வீட்டினரிடம் போதையில் தகராறு செய்து அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டுள்ளார். அதனால், அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
