கரூர்

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கரூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திமுகவினர் நேற்று சின்னதாராபுரம் அருகே உள்ள ஒத்தமாந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி சின்னதாராபுரம் காவலாளர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் காவலாளர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதி வரவேற்றார். மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணிமணி முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்றவர்கள், “அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோ, லட்சுமிதுரைசாமி, மாவட்ட பிரதிநிதிகள் டி.பி.கருப்பசாமி, ராஜ்கண்ணு, மாவட்ட மகளிர் அணி கலாவதிசக்திவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சின்னதாராபுரம் கிளை செயலாளர் வடிவேல் நன்றித் தெரிவித்தார்.