மக்களே ஹப்பி நியூஸ் !! ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..

குற்றாலம் பிரதான அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.
 

Allowed to bath in Kutralam main falls

குற்றாலம் பிரதான அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டியது. இதனை தொடர்ந்து , சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் சீஸன் காலமாக இந்த மாதத்தில் குற்றால அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைய தொடங்கியதால், குற்றால பிரதான அருவியில் குளிக்க கடந்த 5 தினங்களுக்கு பிறகு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற அருவிகளில் குளிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:அலர்ட் மக்களே..!! இன்று 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios