மதுரை அலங்காநல்லூரில் பிப்.1 ஆம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1 ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்.2 ஆம் தேதியும் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திடீர் முடிவு :

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒன்றாக சென்று, இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினர்.ஆட்சியர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விழாக்குழுவினர், தற்போது அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தேதி மாற்றி அமைக்க உள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

முதல்வர் ஒபிஎஸ் துவங்கி வைக்க ஏற்பாடு :

 ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றிய பின்னர் , முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைப்பதாக இருந்த ஜல்லிக்கட்டு, மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக நடைபெறாமல் போனது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு தேதி மாற்றி அமைத்து, மீண்டும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களே , ஜல்லிக்கட்டை துவங்கிவைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.