all of a sudden 130 houses vacated to another place from koovam chennai

மதுரவாயல் கூவம் ஆற்றங்கரையில் இருந்த 130 வீடுகள் அகற்றம்

ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில், விடமால் இரண்டு நாட்கள் மழை தொடர்ந்தாலே லூவம் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுக்கும். கடைசியில் கடலில் கலக்கிறது

நினைவூட்டல்:

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம் அல்லவா....

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு, ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டித்தரவும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆற்றங்கரையோரங்களில் 13 ஆயிரத்து 972 வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இன்று மதுரவாயல் கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 130 வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாநகராட்சி, வருவாய்துறையினர் அதிகாரிகள் தலைமையில் வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த 130 குடும்பங்களுக்கும் கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சைதாபேட்டை பாலம் அருகே அதிகளவில் குடிசை வீடுகள் உள்ளன.இதனையும் விரைவில் அகற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது