பெரம்பலூர்

அகில இந்திய டென்னிஸ் போட்டியில், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

அகில இந்திய டென்னிஸ் போட்டி கடந்த திங்கள்கிழமை (மார்ச் 26) கோயம்புத்தூரில் நடைப்பெற்றது. 

இதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, பாண்டிச்சேரி, உத்தரப்பிரேதசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் டென்னிஸ் அகாதெமி சார்பில் 16 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், அகில இந்திய அளவில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.சூரியா முதலிடம் பெற்றார்.  

மேலும், மாணவர்கள் எஸ்.விஜய் கால் இறுதிக்கும், எம்.தேவதாசன், எம்.கரண் பாலாஜி, எஸ்.பி. ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் சுற்று வரை தகுதிப் பெற்றனர். 

இந்தப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி வளாகத்தில் தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன், செயலாளர் ஆர்.அங்கையர்க்கன்னி, பள்ளி முதல்வர்கள் சு.சேகர், பி.ஆர்.வி.மனோஜ் ஆகியோர் நேற்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.  

பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் எஸ்.பாப்சிகரன், உதவி பயிற்சியாளர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.