Asianet News TamilAsianet News Tamil

சென்னையை புயல் தாக்குமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

All graphics and hype created by our media wasteah poga poguthu and Mr.authorized agency
All graphics and hype created by our media wasteah poga poguthu and Mr.authorized agency
Author
First Published Dec 3, 2017, 3:24 PM IST


சென்னையை வரும் நாட்களில் மிகச் சக்திவாய்ந்த புயல் தாக்கப்போகிறது என்று பரபரப்புச் செய்திகள் வலம்வரும் நிலையில், அதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் எழுதிவரும் தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-

.சென்னையை வரும் நாட்களில் மிகப்பெரிய புயல் தாக்கப் போகிறது என்று பரபரப்பை உண்டாக்கிய நம் ஊடகங்கள் கணிப்பு அனைத்தும் வீணாகப்போகப் போகிறது.

All graphics and hype created by our media wasteah poga poguthu and Mr.authorized agency

கடந்து சென்ற ஒகி புயலை பரபரப்பான செய்தியாக மாற்றி இருப்பது அவசியம், அதை விட்டுவிட்டோம். ஆனால், இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது “மொக்கை”.

இதற்கு இந்த அளவுக்கு பரபரப்ப உண்டாக்க அவசியம் இல்லை.

வரும்வாரத்தில் சென்னைக்கு எந்தவிதமான புயல் எச்சரிக்கையும் இல்லை. தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறினாலும் கூட, அது ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்துவிடும். மேலும், சாதகமான சூழல் இல்லாததால், அது வலுவிழக்கக் கூடும்.

மழை இருக்கும், ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு மழை இருக்காது. கனமழையோ அல்லது மிகமிக கனமழையோகூட இருக்கலாம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம். ஆனால்,நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்தது போன்றோ, அல்லது கன்னியாகுமரியில் ஒகி புயலால் பெய்த மழை போன்றோ  மிக கனமழை இருக்காது. மக்களை மிரட்டாத அளவுக்கு கனமழை இருக்கும்.

All graphics and hype created by our media wasteah poga poguthu and Mr.authorized agency

மீனவர்களுக்கு எச்சரிக்கை

6 முதல் 8-ந்தேதி வரை கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். ஆதலால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்கிறேன்.

அபாயம் இல்லை….

தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், புயல் தாக்கும் அபாயம் இல்லை.

இ்வ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios