சென்னை பேருந்துகளில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தை கட்டுபடுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாநிலக் கல்லூரிக்கே சென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய விதம் அனைவரையும் நெகிழ வைத்தது. அப்போது பேசிய ஏ.கே. விஸ்வாநாதன், தான் விரும்பாத பாடத்தை எடுத்ததால் அதை முதலாமாண்டிலேயே துறந்த நான் அவமானம் காரணமாக தீவிரமாகப் படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வானேன் மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக, சென்னை பேருந்துகளில், மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் பட்ட  கத்தியை கையில் வைத்துக் கொண்டு, பேருந்தில் பெரும் கலாட்டா செய்து வந்தனர். இது தொடர்பாக, ஐந்து  மாணவர்களை கைது செய்தனர் போலீசார்.

இது தொடர்பாக மானவர்களை நேரில் சந்தித்து பேசிய விஸ்வநாதன், எனது குடும்பம் போலீஸ் குடும்பம், 1982-க்குப் பிறகு இப்போ தான் இங்கே வருகிறேன். 1982-ம் ஆண்டு அறிவியல் பாட பிரிவில் சேர்ந்தேன். பின்னர் எனக்கு அதில் அந்த அளவுக்கு விருப்பம் இல்லாததால் முதலாம் ஆண்டிலேயே வெளியேறினேன். 

இந்த கல்லூரியை விட்டு வெளியேறும் போது ஐபிஎஸ் படிக்கும் வெறியோடு நான் இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறவில்லை. உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அந்த அளவிற்கு படிப்பு வரவில்லை. பின்னர் பிஏ ஹிஸ்டரி எடுத்து படித்தேன்...அப்போது ஏன் அந்த படிப்பை இடையில் விட்டுவிட்டு, இந்த உதவாத ஹிஸ்டரி படிப்பை எடுத்து உள்ளாயே என்று பலரும் என்னை கிண்டல் செய்து கேள்வி கேட்க தொடங்கினர். 

அதன் பின், 1990-ல் தமிழகத்திலேயே முதல் மாணவனாக யூபிஎஸ்சியில் தேர்வானேன்.அப்போது எனக்கு ஐஏஎஸ்ஸும் தெரியாது, எந்த சர்வீஸ் பற்றியும் தெரியாது. பின்னர் கடுமையாக படித்து, ஐபிஎஸ் ஆனேன்.

இதை எதற்கு நான் சொல்கிறேன் என்றால், நீங்களும் உங்களுக்கு பிடித்த படிப்பை எடுத்து படியுங்கள்.. வெற்றி பெறுங்கள்..என்று அறிவுரை கூறினார். காவல் ஆணையர் நேரடியாக கல்லூரிக்கே சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடியது மாணவர்களை அதிகம் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது. மேலும் காவல் ஆணையருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.