நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை.! நடிகர் அஜித் குமார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாமிடம் பிடித்தது. ரசிகர்களின் ஆதரவு மற்றும் ஊக்கம் தனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது என்றும், மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கத் தூண்டுதலாக உள்ளது என்றும் அஜித் கூறினார்.

Ajith thanks the film industry, political leaders and fans KAK

திரைத்துறை- விளையாட்டில் கலக்கும் அஜித்

தமிழக திரைத்துறையில் கலக்கி வருபவர் நடிகர் அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார் மற்றும் பைக் ரேசில் மிகுந்த ஆர்வம் உள்ள அஜித் அவ்வப்போது போட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் அணியினர் துபாயில் நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டது. அப்போது நடிகர் அஜித்குமாரின் அணி கடும் போட்டிக்கு இடையே மூன்றாம் இடம்பிடித்தது.

Ajith thanks the film industry, political leaders and fans KAK

இந்த முடிவுகள் வெளியான நிலையில் நடிகர் அஜித் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். இதனையடுத்து இந்திய தேசிய கொடியை காண்பித்து தனது வெற்றியை அஜித் கொண்டாடினார். இதனையடுத்து நடிகர் அஜித்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தநிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அஜித் அறித்தை வெளியிட்டுள்ளார். 

 


நன்றி தெரிவித்த அஜித்

அந்த அறிக்கையில், துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

Ajith thanks the film industry, political leaders and fans KAK

வார்த்தைகள் இல்லை

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios