பெயர்ந்து விழுந்த திருச்சி விமான நிலைய மேற்கூரையை பலமுறை கோரிக்கைக்கு பிறகு சீரமைக்க ரூ.40 இலட்சம் ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் நடைபெறுகிறது.

இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பயணிக்கும் ஏராளமான பயணிகளுக்கு திருச்சி விமான நிலையமே பிரதானமாக இருக்கிறது.

நாளுக்கு நாள் பயனிகல் அதிகரித்து வரும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் இருக்கும் மேற்கூரை திடீரென ஒருநாள் பெயர்ந்து விழுந்தது.

இத்தனை நாள் வரை பயணிகளை வெயிலில் இருந்து காத்து வந்த மேற்கூரையின் ஓடுகள் விழுந்ததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

ஒரு ஆறுதல் என்னவென்றால், சென்னை விமான நிலையத்தை விட இது சற்று பரவாயில்லை என்பதே. ஆனால், இதனாலும் பயணிகள் அவதி சிரமப்பட்டனர் என்பதே உண்மை.

பெயர்ந்து விழுந்த மேற்கூரைகளை சரி செய்யுமாறு பயனிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர். இப்போதுதான் இதற்கு விடிவுகாலம் பிறந்தது போலும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த மேற்கூரையை சீரமைக்க ரூ.40 இலட்சம் ஒதுக்கப்பட்டு, சீரமைக்கும் பணி நேற்றுத் தொடங்கியது.

விரைவில் சீரமைகப்பட்டு, புதுப் பொலிவுடன் மேற்கூரைகள் பயனிகளை வெயிலில் இருந்து காக்க தயாராகிவிடும்.

பலமுறை அளித்த கோரிக்கைக்கு இப்போதாவது நடவடிக்கை எடுக்க முற்பட்டனரே என்று பயனிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.